தமிழகம்

தேமுதிக-வினருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை: விதிகளைப் படித்துவிட்டு வாருங்கள்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை விதிகளை படித்துவிட்டு வாருங்கள் என்று தேமுதிக-வினரைப் பார்த்து பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை கூறினார்.

பேரவையில் வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தின்போது தேமுதிக உறுப்பினர் களுக்கும், வருவாய்த்துறை அமைச்சருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது, தேமுதிக உறுப்பினர் கள் பலர் ஒரே சமயத்தில் எழுந்து பேசினார்கள். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது பேரவைத் தலைவர் தனபால், “கட்சித் துணைத் தலைவர் (மோகன்ராஜ்) இருக்கும்போது, மற்றவர்கள் எழுந்து பேசுகிறீர்கள். இது முறையல்ல,” என்றார்.

எனினும், பேச வாய்ப்புக் கேட்டு தேமுதிக-வினர் நின்றபடி குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். உடனே இருக்கையில் இருந்து எழுந்த பேரவைத் தலைவர், “உங் களை கடுமையாக எச்சரிக்கிறேன். பேரவை விதிகளைப் படித்துவிட்டு வாருங்கள். பேரவைத் தலைவர் எழுந்து நின்றால், உறுப்பினர்கள் அமரவேண்டும் என்பது தெரி யாதா,” என்றார்.

பின்னர், தேமுதிக உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர்.

SCROLL FOR NEXT