மெரினா கடற்கரையில் குற்றங்களைத் தடுக்கவும், அதன் அழகிய தோற்றத்துக்காகவும் அங்குள்ள கடைகளை முறைப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயன், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் சென்னைக்கு வரும் சுற்றுலாப் பணிகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இந்தியாவிலேயே இயற்கையாக அமைந்த நீண்ட நகர்ப்புற கடற்கரை இதுவாகும். இந்தக் கடற்கரைக்கு வார நாட்களில் தினமும் சுமார் 30,000 பேரும், வார இறுதி நாட்களில் 50,000 பேரும் வந்து செல்கின்றனர்.
இக்கடற்கரையில் உள்ள கடைகள் முறையற்ற வகையில் இருப்பதால், மெரினா கடற்கரை அதன் அழகிய தோற்றத்தை இழக்கிறது. மேலும் அங்கு குற்றச் செயல்கள், பாலியல் தொழில், மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து, கடல் மணலில் வீசு வது போன்ற செயல்களும் அரங் கேறி வருகின்றன. அதனால் கடற்கரையின் அழகை மேம்படுத்த வும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் அங்கு முறையற்ற வகையில் திறக்கப்பட்டுள்ள 1,900 கடைகளை முறைப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின் னர் மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடற்கரைக்கு வரும் பொது மக்களைப் பாதுகாக்கவும், வியா பாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் இருக்கவும், கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கவும், இங் குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தி யிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தொடர் கண்காணிப்பின் மூலம், ஒழுங்கற்ற முறையில் கடைகள் வைப்பது தடுக்கப்படும். போது மான கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். வியாபாரிகளிடம் மிகக் குறைந்த பயன்பாட்டு கட்டணமாக மாதத் துக்கு ரூ.100 வசூலிக்க இருக்கி றோம். போதுமான உயர்கோபுர மின் விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகளும் செய்யப்பட உள்ளன.
முதல் முறையாக மாநகர காவல்துறை, சென்னை மாநக ராட்சிக்கு தற்போது முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பேரிடர் காலங்களில் அவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது.
இவ்வாறு மாநகராட்சி ஆணை யர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.
மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியுடன், சென்னை மாநகரக் காவல்துறை இணைந்து கடைகளை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்து கடைக்காரர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த முயற்சியின் மூலம் இப்பகுதியில் குற்றங்களும் குறைய வாய்ப்புள் ளது. கடலில் குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, வட்டார துணை ஆணையர்கள் சுபோத்குமார், திவ்யதர்ஷினி, மாநகர கூடுதல் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர் அன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.