மத்திய அரசு உதவியால்தான் தமிழகத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மற்ற மாவட் டங்களைவிட புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. தமிழக அரசு புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டது போல, தற்போது மீட்பு பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறது. மத்திய அரசின் உதவியால்தான் மாநில அரசு இந்தப் பணிகளை செய்து வருகிறது.
புயல் பாதிப்பு குறித்த முதல் கட்ட அறிக்கையை இன்று தாக் கல் செய்வதாக முதல்வர் தெரிவித் துள்ளார். அதன் பிறகு மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்தபிறகு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றார்.
முன்னதாக திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:
மக்கள் கோபம் நியாயம்
புயல் பாதித்த பகுதிகளில் நிவார ணம் கிடைக்கவில்லை என்பதற் காக மக்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. அவர் களது நியாயமான கோரிக்கை களை உடனே அரசு நிறை வேற்றி, அவர்களுக்கான நிவார ணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.