தமிழகம்

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நூலகர்களுக்கு விருது: பொது நூலகத்துறை இயக்குநர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களையும், புரவலர்களையும் சேர்க்கும் நூலகர்களுக்கு விருது வழங்கப்படும் என்று பொது நூலகத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

பொதுநூலகத்துறை இயக்கு நரும் (கூடுதல் பொறுப்பு), பள்ளிக் கல்வி இயக்குநருமான வி.சி.ராமேஸ்வரமுருகன், மாவட்ட நூலகர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி (இன்று) நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. நூலகர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நூலக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.

நூலகங்களுக்கு அதிகப்படி யான உறுப்பினர்களையும், புரவ லர்களையும் சேர்க்கும் முதல் 3 மாவட்டங்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், கேடயமும் வழங்கப்படும். மாநில அளவில்,நூலகத்தை தூய்மை யாகப் பராமரிக்கும் 3 நூலகர்கள் கவுரவிக்கப்படுவர்.

குழந்தைகளுக்கு நல்ல பழக் கத்தை உருவாக்கும் வகையில் ‘கதை சொல்லி’ நிகழ்ச்சி, சதுரங்கப்போட்டி, ‘சிந்தனை முற்றம்’ நிகழ்ச்சி நடத்தப்படும். ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை நூலகங்க ளில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள், புரவலர்களின் விவரங்களைச் சமர்ப் பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT