புயல் பாதிப்பைத் தொடர்ந்து என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் முதல் கட்டமாக டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அடுத்த கட்டமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 500 பணியாளர்களை அனுப்பியுள்ளது.
மேலும், தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க என்எல்சி இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன் வந்தனர். இந்தத் தொகையுடன் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது பங்களிப்பாக ரூ.3 கோடி வழங்க உள்ளது. இந்த தகவலை என்எல்சி இந்தியா நிறுவன மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.