தமிழகம்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.13 கோடி சேர்ந்தது: பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அறக்கட்டளைகள் பங்களிப்பு

செய்திப்பிரிவு

கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாத ுரம், வடலூர், திண்டுக்கல், சிவ கங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி யது. இப்பகுதிகளில் வாழ்வாதா ரத்தை இழந்த மக்களுக்கு உதவவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணி களுக்காகவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கும்படி கடந்த 19-ம் தேதி பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத் தார்.

இதை ஏற்று, தமிழக முதல்வரிடம் பலர் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர். கடந்த 19-ம் தேதி நான்கு நேரி எம்எல்ஏ ஹெச்.வசந்தகுமார் ரூ.25 லட்சம், 20-ம் தேதி டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி, சக்தி மசாலா நிறுவன மேலாண் இயக்குநர் பி.சி,.துரைசாமி, திமுக அறக்கட்டளை சார்பில் பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தலா ரூ.1 கோடி அளித்தனர். லைக்கா நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 1 லட்சம் , எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஏ.சி.சண்முகம் ரூ.20 லட்சம், நடிகர் அஜித்குமார் சார் பில் ரூ.15 லட்சம் என ரூ.6 கோடியே 61 லட்சம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 23-ம் தேதி, வேலம் மாள் அறக்கட்டளை, எஸ்ஆர் எம் குழு மம், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கங்கள், ராம்கோ குழும நிறுவனம், லெஜண்ட் சரவணா ஸ்டோர் ஆகியவை சார்பில் தலா ரூ.1 கோடி, மதுரை புறநகர் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தலா ரூ.10 லட்சம், நடிகர் விவேக் ரூ.5 லட்சம் என ரூ.5 கோடியே 25 லட்சம் வழங்கப்பட்டது. நேற்று ஜிஆர்டி நிறுவனம் சார்பில் அதன் மேலாண் இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்த பத்மநாபன், ஜி.ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் ரூ.50 லட்சத் துக்கான காசோலையை வழங்கி னர்.

மேலும், பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகள் சேர்த்து இதுவரை ரூ.13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய் பெறப்பட்டுள் ளது.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT