நடிகை ஜோதிகா, விதார்த் உள்ளிட்டோர் நடித்து ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ என்கிற திரைப்படம் விரைவில் வர உள்ளது. இதை அனுமதி பெறாமல் 42 இணையதளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது. ராதா மோகன் ஏற்கெனவே ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ப்ரித்விராஜ் ஆகியோரை வைத்து தயாரித்த ‘மொழி’ திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.
தற்போது வெளியாக உள்ள ‘காற்றின்மொழி’ படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை கோரி படத்தை தயாரித்துள்ள கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் உரிமையாளர் தனஞ்செயன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், காப்புரிமையை மீறி 42 இணையதளங்களில் காற்றின் மொழி படத்தை வெளியிட உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், காற்றின் மொழி படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.