தமிழகம்

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இலங்கை கடற்படையின் அராஜகத்தால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் அச் சத்துடனேயே நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி சுமுகத் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தென்னைக்கு இழப்பீடு

கஜா புயல் காரணமாக தென்னை மரங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தொடர் வாழ்வாதாரத்துக்கு நிவாரணத் தொகையை நம்பி காத்திருக்கின்றனர். எனவே எத்தனை தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோ, அத்தனை மரங்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதில் விவசாயிகளின் நில அளவை கணக்கில் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மரங்களை சரியாக கணக்கிட்டு, ஒரு மரத்துக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் தொகையை அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்தால் மட்டுமே அவர்களால் விவசாயத்தை தொடர முடியும். எனவே தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முழுமையாக, முறையாக உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT