தமிழகம்

இன்னொரு படத்தை ஓட வைக்க விரும்பவில்லை: ரஜினியின் புதுப் படம் குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்

செய்திப்பிரிவு

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாஜக சார்பில் இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பில் மருந்துகள் உட்பட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும்.

ஸ்டெர்லைட் அறிக்கை மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மக்களைப் பாதிக்கும் எதையும் பாஜக ஒத்துக் கொள்ளாது என்றார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இன்னொரு படத்தை ஓட வைக்க விரும்ப வில்லை" என்று தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT