திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே ரூ.20 லட்சம் மதிப் புள்ள தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் (குட்கா) பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி அருகே கடப்போ காத்தி கிராமத்தில் தனியார் கிரா னைட் மற்றும் டைல்ஸ் விற்பனை நிலையம் உள்ளது. இந்நிறுவன கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட் களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. குற்றாலம் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தி, பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து அப்பகுதி உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப் பதாகவும், அவர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும், போலீ ஸார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் அதிக மாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.