பூரண மதுவிலக்கு கேரளா மாநிலத்தில் சாத்தியமாகும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் சாத்திய மாகாது என்று தருமபுரியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தின்போது அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். வெள்ளிக்கிழமை அரூர் வட்டம் சித்தேரி மலைகிராமங்களில் நன்றி அறிவிப்புக்காக சென்றிருந்தார். பின்னர் மாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறியது:
தமிழகத்தில் மது விற்பனை நடப்பதால் பல லட்சம் இளைஞர் களும், ஆண்களும் தங்களின் பொருளாதாரத்தை வீணாக செலவிட்டு வருகின்றனர். இதனால்தான் கிராம ஏழைக் குடும்பத்தினர் இன்னும் ஏழை களாகவே உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் நல்ல கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலை மாற வேண்டும் என்பதற்காகத் தான் மருத்துவர் ராமதாஸ் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்கிறார்.
இந்தியாவிலேயே அதிகம் மதுவிற்பனை நடக்கும் மாநிலம் கேரளம்தான். ஆனால், அம்மாநில அரசு 450-க்கும் மேற் பட்ட மதுக்கடைகளை சமீபத்தில் அதிரடியாக மூடியதுடன், மீதமுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை விரைவில் மூடுவதாக அறிவித்துள்ளது. அதிக மதுப்பிரியர்கள் உள்ள கேரளாவில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும்போது தமிழ கத்தில் மட்டும் ஏன் சாத்திய மாகாது. இங்குள்ள அரசு தமிழக மக்களின் வளர்ச்சியிலும், நலனிலும் உண்மையான அக்கறை கொள்ளவில்லை என் பதைத்தான் இது காட்டுகிறது.
கேரள மாநிலத்தை பின் பற்றி தமிழக அரசும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். மதுக்கடைகளை மூடக்கோரி பாமக சார்பில் மகளிரை முன்னிறுத்தி மாபெரும் போராட்டங்களை நடத்த உள்ளோம். பாமக ஆட்சியில் அமர்ந்தால் தமிழகத்தில் உடனடி யாக பூரண மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.