புழல் சிறையில் கைதிகளின் அறை களில் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் செல்போன்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கைதி களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறைத்துறை அதிகாரிகள் அவர் களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புழல் சிறை வார்டர்கள் 23 பேரை இடமாற்றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், புழல் சிறைக் குள் மீண்டும் செல்போன்கள் மற்றும் கஞ்சா, சிகரெட் போன் றவை சகஜமாக பயன்படுத்தப் படுவதாக புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் புழல் சிறைக்குள் நேற்று காலை 5.30 மணி அளவில் புழல் சரக காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், ஆய்வாளர் நட ராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணன், ஜெயந்தி ஆகியோர் தலைமையில் சுமார் 100 போலீ ஸார் திடீர் சோதனை நடத்தினர். தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடந்தது.
அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள கழிப்பறை அருகே மண் ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல் போன்களை போலீஸார் கண்டு பிடித்தனர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது. அவற்றை சிறைக்குள் கொண்டு வருவதற்கு உதவி செய்ததாகத் தான் சிறைக்காவலர்கள் 23 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போது மீண்டும் அதே தவறு எப்படி நடக்கிறது என்பது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் 2,400 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் உள்ள கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்