ஆவடியில் உள்ள பண்ணை வீட்டில் கணவன் - மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் வேலைக்காரர் சுரேஷ் குமார், ஆந்திராவில் நடந்துள்ள 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என விசார ணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி - சேக்காடு, ஐயப்பன் நகரைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மனைவி விலாஷினி இருவரும் கடந்த 27-ம் தேதி அவர்களின் பண்ணை வீட்டில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் வீட்டு வளாகத்தில் தங்கியிருந்த வேலைக்காரரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தலை மறைவாகி விட்டார். எனவே, அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், குற்றவாளி களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜய வாடா ஆகிய நகரங்களில் 2 படை கள் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
போலீஸாரால் தேடப்படும் சுரேஷ்குமார், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வர் என்றும், அவர் விசாகப்பட்டி னம் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் நடந்துள்ள 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் விசா ரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள சுரேஷ்குமாரைத் தேடும் பணி யில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.