சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பெப்சி குளிர்பான விற்பனை சமீபத்தில் தொடங் கப்பட்டது. கோக், குர்குரே ஆகியவையும் விரைவில் விற்கப் படும் என்று அதிகாரிகள் தெரி வித்திருந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 10-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. இச்செய்தியைப் படித்ததும் இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் உட்பட பல தரப்பின ரும் தங்கள் எதிர்ப்பை ‘உங்கள் குரல்’ சேவையில் பதிவு செய்தனர்.
திருச்சியை சேர்ந்த இல்லத்தரசி சுபா கூறும்போது, ‘‘துரித வகை உணவுப் பண்டங்கள் சாப்பிட்டால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினை கள் வரும். சில வகை குளிர் பானங்கள் உடல்நலத்துக்குத் தீங்கானது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். தபால் நிலை யத்தில் இவற்றை விற்பது ஏற்றுக் கொள்ள முடியாதது’’ என்றார்.
சென்னையை சேர்ந்த சுப்பிர மணியன் கூறும்போது, ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் நிலையத்தில் பெப்சியை விற்க வேண்டிய அவசியம் என்ன?’’ என்றார்.
இந்திய பாரம்பரிய உணவுப் பழக்கங்களை ஊக்கு விக்கும் மருத்துவர் கு.சிவராமன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், வழக்க றிஞர் சுந்தர்ராஜன், புவனேஸ்வரன், ராஜாராம் ஆகியோர் தபால் அலுவலகத்தில் அந்நிய நாட்டு குளிர்பானங்கள், துரித வகை சிப்ஸ்கள், தின்பண்டங்கள் விற்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத் தினர். ஏராளமானோர் கையெழுத்து போட்ட அந்த மனுவை சென்னை அஞ்சல் வட்ட தலைமை தபால் அதிகாரி மெர் வின் அலெக்ஸாண்டரிடம் அளித்த னர். இதுகுறித்து ‘தி இந்து’ விடம் சுந்தர்ராஜன் கூறியதாவது:
இந்திய அஞ்சல் நிறுவனம் வியாபார ரீதியில் அல்லாமல் மக்களுக்கு சேவை செய்து வரும் பொதுத் துறை நிறுவனம். அத்தகைய நிறுவனம் உடலுக்கு கேடு விளைவிக்கும் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பது தவறான முன்னுதாரணம். அமெரிக் காவில் இதுபோன்ற குளிர் பானங்கள், துரித வகை உணவுகள், தின்பண்டங்களுக்கு எதிராக அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பிரச்சாரம் செய்து வருகிறார்.
துரித வகை உணவுகளைத் தடை செய்யவேண்டும் என்று அறி வியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில் தபால்துறை இவ்வாறு செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.
தபால் நிலையங்களின் வருவாயை அதிகரிக்க ஆவின் பொருட்கள், பதநீர், பாரம்பரிய சிறு தானிய உணவுப் பொருட்கள், முக்கிய நகரங்களின் சிறப்புகளைச் சொல்லும் புத்தகங்கள், நமது நாட்டின் பாரம்பரிய கலைப் பொருட் கள் போன்றவற்றை விற்பனை செய்யலாமே என்றோம். இது குறித்து பரிசீலிப்பதாக அதிகாரி மெர்வின் உறுதி அளித்தார்.
இவ்வாறு சுந்தர்ராஜன் கூறினார்.
இதுகுறித்து தலைமை தபால் அதிகாரி மெர்வின் அலெக் ஸாண்டர் கூறியதாவது:
பெப்சி உள்ளிட்டவை தபால் நிலையத்துக்குள் விற்கப்படுகிறதே தவிர, அவற்றை தபால் துறை விற்கவில்லை. அந்த குளிர்பான நிறுவனம்தான் விற்கிறது. நாங்கள் இடம் மட்டுமே கொடுத்துள்ளோம்.
இந்த பொருட்கள் அந்நிய நாட்டை சேர்ந்தவை என்பது தேவை யற்ற பேச்சு. மத்திய உணவுக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எதையும் நாங்கள் விற்கவில்லை. தேவை என்றால் காளிமார்க் பவன்டோ, பதநீர் விற்கவும் நாங்கள் இடம் தரத் தயார்.
இவ்வாறு மெர்வின் அலெக்ஸாண்டர் கூறினார்.