தமிழகம்

சென்னையில் காலைமுதல் தொடர் மழை: இன்றும் நீடிக்க வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று காலையில் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. இன்றும் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து சென்னை யில் குறிப்பிடும்படியாக மழை பெய் யாமல் இருந்தது. இதனால் சென்னை நகர் மக்கள் கடும் வேதனையில் இருந்தனர். கஜா புயலும் சென்னை நகர மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடை யில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று முன்தினம் மாலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று காலையில் இருந்து சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று விடுமுறை தினம் என்ப தால், பொதுமக்கள் சாரல் மழையை ரசித்தனர்.

சென்னை மையப் பகுதியை விட, திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகமாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை 2.8 செமீ மழை பதிவானது. புறநகர் பகுதிகளான திருப்போரூரில் 3.2 செமீ, திருக் கழுகுன்றத்தில் 3.9 செமீ, மாமல்ல புரத்தில் 3.4 செமீ, பூண்டியில் 2.7 செமீ, செங்குன்றத்தில் 2.2 செமீ, திருத்தணியில் 4.4 செமீ மழை பதிவாகி இருந்தது. சென்னையில் இன்றும் மழை நீடிக்க வாய்ப்புள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

சென்னை பல்கலை.யில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் துரைசாமி நேற்று அறிவித்தார்.

SCROLL FOR NEXT