தமிழகம்

இடைநிலை ஆசிரியர் பணி நியமன முதல்கட்ட பட்டியல் வெளியீடு: தொடக்கக் கல்வித்துறைக்கு 1,675 பேர் தேர்வு

செய்திப்பிரிவு

இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல்கட்ட தேர்வுபட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தொடக்கக் கல்வித்துறைக்கு 1,675 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட தேர்வு பட்டியல்

கடந்த 2012, 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் (தாள்-1) தேர்ச்சி பெற்ற 31,500 இடைநிலை ஆசிரியர் களின் வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலியிடங்கள் பட்டியல் கடந்த 21-ந்தேதி வெளி யானது. அதில், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் 2,582 காலியிடங்கள் இடம்பெற்றன. இந்த நிலையில், தொடக்கக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 1675 இடைநிலை ஆசிரியர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட் டது. ஆசிரியர்களுக்கு சம்பந்தப் பட்ட துறையிடம் மூலம் விரைவில் பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித் துள்ளார். தற்போது வெளியிடப்பட் டிருப்பது முதல்கட்ட தேர்வு பட்டியல் ஆகும். இதைத் தொடர்ந்து, கள்ளர் சீரமைப்பு பள்ளி களுக்கு அறிவிக்கப்பட்ட 64 காலியிடங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி களுக்கு அறிவிக்கப்பட்ட 669 காலியிடங்கள் ஆகியவற்றுக்கான தேர்வுபட்டியல் அடுத்த கட்டமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT