தமிழகம்

சேலம் சிறையில் 100 கைதிகளுக்கு வாந்தி, மயக்கம்

செய்திப்பிரிவு

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம், பேதி உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட் டது. பாதிக்கப்பட்டவர்கள் மத்திய சிறையில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு கைதிகளில் ஒருவருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து 7 கைதிகள் வாந்தி, பேதி ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகினர். உடனடியாக சிறை யிலுள்ள மருத்துவமனையில் கைதி களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. பாதிப்படைந்த கைதிகளுக்கு சிறை மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றி, மருந்து, மாத்திரை தரப்பட்டது.

தகவல் அறிந்து, சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய மருத்துவர் குழு சென்று, சிகிச்சை அளித்துவருகிறது. உடல் உபாதை அதிகமுள்ள கைதிகளை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைத்துறை உயர் அதிகாரிகள், உடல் உபாதைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘குடிநீரால் பாதிப்பு இல்லை’

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலம் மத்திய சிறைச்சாலைக்கு தனி குடிநீர்த் திட்டம் மூலம் ஏற்காடு மெயின் லைனில் இருந்து 24 மணி நேரமும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பிரதான குழாயில் இருந்துதான், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 கோட்டங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டுவருகிறது.

சிறைச்சாலையில் தரைமட்ட தொட்டியில் குடிநீரை சேமித்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சிறையில் உள்ள சமையல் கூடம், சிறைத்துறை துணைக் கண்காணிப்பாளர் கட்டிடம் உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை ஆய்வு செய்ததில், குடிநீரால் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், சிறையில் இருந்து 4 இடங்களில் மாதிரி எடுத்து, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT