புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 100 கி.மீ.வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை இன்று மாலை விடுத்த உத்தரவில் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புயல் காரணமாக நாளை (வியாழக்கிழமைவிடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேபோல் புதுச்சேரி) பிராந்தியமான காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.