தமிழகம்

மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை தேர்வு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி

செய்திப்பிரிவு

மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.

மக்களவையின் துணை சபாநாயகராக அதிமுக அவைத் தலைவர் தம்பிதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மக்களவையில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 16-வது மக்களவை துணை சபாநாயகராக மு.தம்பிதுரையை ஒருமனதாக தேர்ந்தெடுக்க ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும், இந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT