தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக மேட்டூர் எம்எல்ஏ பார்த்திபன் மீது மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது. இந்த மனு மீதான சாட்சி விசாரணை வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில், கடந்த மார்ச் 27ம் தேதி தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மேட்டூர் எம்எல்ஏ பார்த்திபன், முதல்வரை அவதூறாகப் பேசியதாக, அரசு வழக்கறிஞர் தனசேகரன், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ் ஏற்றுக் கொண்டு, மனு மீதான சாட்சி விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.