பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, அமைச்சர்கள் கே.ஏ.செங் கோட்டையன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒருங் கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியம் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்), அ.மாயவன் ( தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), க.மீனாட்சி சுந்தரம் (தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்), கு.வெங்கடேசன் (தலை மைச் செயலகம்) உள்ளிட்ட 20 பேர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், நேற்று அரசு அலுவலர் ஒன்றியம் மற் றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மன்றம் சார்பில், அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன் தலைமையில் நிர்வாகிகள், பணி யாளர் நலன் மற்றும் நிர்வாக சீர் திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமாரை சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக ஆர்.சண்முகராஜன் கூறும்போது, “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், வல்லுநர் குழு தலைவர் டி.எஸ்.தர் அளித்த அறிக்கையின் அடிப்படை யில், முழுமையாக பங்களிப்பு ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. பேச்சுவார்தை மிகவும் சுமுகமாக நடந்தது.எனவே, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப் பட்ட சங்கங்கள், 5 பொதுச்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் கலந்து கொள்ளாது’’என்றார்.
இந்நிலையில், தலைமைச் செய லக சங்கம் சார்பில் அதன் தலை வர் பீட்டர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் டி.ஜெயக் குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 45 நிமிடங்கள் நடந்த பேச்சு வார்த்தையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. அப்போது, விரைவில் முதல்வரை சந்திக்க ஏற் பாடு செய்து தருவதாகவும், தலை மைச் செயலகத்துக்குள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வருவதற் கான வழியில், ராணுவம் ஏற்படுத்திய தடைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக சங்கத் தின் தலைவர் தெரிவித்துள்ளார்.