ஊழியரை கடத்திச் சென்று தனியார் நிறுவனத்தில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் குறித்து போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
சென்னை எர்ணாவூர் ராம கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பிரவீன். அதே பகுதியில் தீபா இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப் பதாவது:
மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிகள் எடுத்து 3 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட ஆட்கள் எங்களது நிறுவன ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து, ஒழுங்காக தொழில் செய்ய வேண்டும் என்றால் திருவொற் றியூர் அதிமுக பிரமுகர் ஒருவ ருக்கு மாமூல் தர வேண்டும் என்று மிரட்டினர்.
மணலி காமராஜர் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் சிந்தூர்கனி செட்டி என்பவரை, அதிமுக பிரமுகர் ஒருவர் பெயரைச்சொல்லி, அவர் அழைத்து வரச்சொன்னதாகக் கூறி 4 பேர் சேர்ந்து சித்தூர்கனியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் எனக்கு போன் செய்து, அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் கள். எனவே எங்கள் நிறுவன ஊழியரை கடத்திய ரவுடிகள் மீதும் அதிமுக பிரமுகர் மீதும் நடவடிக்கை எடுத்து ஊழியரை மீட்டுத்தர வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
புகாரின்பேரில் காவல் ஆய் வாளர் கண்ணன் விசாரணை நடத் திய நிலையில், ரவுடிகள் சிந்தூர் கனியை விடுவித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல அதிமுக பிரமுகரிடமும் மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ், வினோத், மணிகண்டன் ஆகிய 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.4 பேர் சேர்ந்து சித்தூர்கனியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் எனக்கு போன் செய்து, அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.