தமிழகம்

நாய்க்கறி வதந்தியால் ரூ.8 கோடி வருவாய் இழப்பு:இறைச்சி வியாபாரிகள் சங்கம் தகவல்

செய்திப்பிரிவு

நாய்க்கறி பிடிபட்டதாக வதந்தி பரவியதால் இறைச்சி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது :

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆடுகளுக்கு சிறிய அளவில் வால் இருக்காது. நீளமாகத்தான் இருக்கும். இந்த தகவலை அறி யாத அதிகாரிகளால் பிடிபட்டது நாய்க்கறி என்று தவறான செய்தி பரப்பப்பட்டது.

இதனால், நியாயமான முறையில் இறைச்சி வியா பாரம் செய்பவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

நாய் இறைச்சி என்று தகவல் பரவியதை தொடர்ந்து, சென்னையில் தினமும் 4 ஆயிரம் ஆடுகள் வரை வெட்ட வேண்டிய ஆட்டு தொட்டியில் ஆயிரம் ஆடுகளுக்கும் குறைவாகவே வெட்ட கூடிய சூழல் ஏற்பட்டது. ஆட்டிறைச்சி வியாபாரிகள் , சிறிய ஓட்டல்களை நடத்துபவர்கள் உட்பட இறைச்சியை சார்ந்து தொழில் செய்பவர்களுக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.7 கோடியில் இருந்து ரூ.8 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆடுகளை வாகனங் களில் கொண்டு செல்வதற்கு பர்மிட் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பர்மிட் வழங்கப்படுவதில்லை. ஆடு களை கொண்டு வர பர்மிட் வழங்க வேண்டும். இறைச்சிகளை பரிசோதனை செய்யும் அதிகாரிகளுக்கு ஆடு, மாடு உள்ளிட்ட விலங்கினங்கள் குறித்த புரிதல் இருக்க வேண்டும். அது போன்ற அதிகாரிகளையே பரிசோதனை செய்யும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு ஏ.அலி கூறினார்.தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ஆடுகளுக்கு சிறிய அளவில் வால் இருக்காது. நீளமாகத்தான் இருக்கும். இதை அறியாத அதிகாரிகளால் பிடிபட்டது நாய்க்கறி என்று தவறான செய்தி பரப்பப்பட்டது.

SCROLL FOR NEXT