தமிழகம்

வேலூர் சிறையில் நளினி மீண்டும் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக குடிப்பதற்கு ஆழ்துளை கிணற்று நீர் சப்ளை செய்யப்படுவதாகவும், சக கைதிகள் தன்னை சந்தித்துப் பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறி கடந்த வாரம் திங்கள்கிழமை முதல், நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிறைத்துறை டிஐஜியிடம் ஆகஸ்ட் 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் உண்ணா விரதப் போராட்டத்தை நளினி கைவிட்டார்.

இந்நிலையில், அதிகாரிகளின் வாக்குறுதியின்படி நேற்று நளினியிடம் பேச்சுவார்த்தை நடத்த சிறைத்துறை டிஐஜி வராத தைக் கண்டித்து செவ்வாய்க் கிழமை முதல் நளினி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்.

SCROLL FOR NEXT