தமிழகம்

உயர் நீதிமன்ற நீதிபதியாக புகழேந்தி நியமனம் 

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியவர் பி.புகழேந்தி. இவரை சென்னை உயர் நீதிமன் றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமத்தூர்.

இவரது தந்தை பாலகிருஷ்ணன் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயபாரதி கூட்டுறவுத்துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், தூத்துக்குடி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் ஜூனி யராக பணியாற்றிய அனுபவத் துடன் சிவில், கிரிமினல், ரிட் வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகளில் புலமை பெற்றவர். கடந்த 2011-ல் சிறப்பு அரசு ப்ளீடராகவும், 2016 முதல் மதுரை உயர் நீதிமன்ற கிளையி்ன் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். விரைவில் இவர் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதன்மூலம் உயர் நீதி மன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT