தமிழகம்

காவல் துறையில் காலியாக உள்ள 5% பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்: பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

செய்திப்பிரிவு

சென்னை

காவல் துறையில் காலியாக உள்ள 5 சதவீதம் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணையத்தால் காவல் துறை, சிறை மற்றும் தீயணைப் புத் துறைகளுக்கு 6 ஆயிரத்து 119 காவலர்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் தமிழக காவல் துறையின் வீரத்தியாகிகள் புத்தகம் வெளி யீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி இந்த விழாவில் பங்கேற்று, புத்தகத்தை வெளி யிட்டு, பணி நியமன ஆணை களையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

உலகிலேயே திறமை வாய்ந்த ஸ்காட்லாண்டு யார்டு போலீ ஸுக்கு இணையாக தமிழக காவல் துறையின் பணி பாராட்டப்படு கிறது. அதுபோல் தமிழக சிறைத் துறையினர், குற்றம் புரிந்தவர் களுக்கு தண்டனையை நிறைவேற் றும் பொறுப்புடன் சிறைவாசிகள் மனம் திருந்தி வாழவும், மறு வாழ்வுக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

பெருமிதம் கொள்ள வேண்டும்

தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், தீ மற்றும் இதர பெரும் விபத்துக்களின்போது, தீயணைப்புத் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாத்து வருகின்றனர். இதுபோன்ற பெரு மைகளைக் கொண்ட தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் பணியில் சேரும் நீங்கள், பெருமிதம் கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் 6 ஆயிரத்து 119 சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங் கப்படுகிறது. இதில் 5 ஆயிரத்து 531 பேர் காவல் துறையிலும், 351 பேர் சிறைத் துறையிலும், 237 பேர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று, காவல் துறையில் சுமார் 5 சதவீதத்துக்கும் குறைவான பணியிடங்களே காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

146 வீரத் தியாகிகளின் சேவைகள்

இவ்விழாவில் ‘வீரத் தியாகிகள்’ என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதில் 1960-ம் ஆண்டு முதல் இதுவரையிலும் தமிழக காவல், சிறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தமது பணியின் போது உயிரினைத் துறந்த 146 வீரத் தியாகிகளின் சேவைகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், காவல்துறையில் சுப என்ற திருநங்கைக்கும் முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்.

விழாவில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதய குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, சட்டம் - ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், டிஜிபிக்கள் கே.பி.மகேந்திரன், ஜாங்கிட், காந்திராஜன்,ஜே.கே.திரி பாதி, கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT