கோவை குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸாரால் கடந்த 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கேரள மாநிலம் மலப்புரத் தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் மொத்தம் 181 பேர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் 178-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள குஞ்சு முகமது (58) தலைமறைவானார்.
கடந்த 16 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீஸார் அவரைத் தேடி வந்தனர். ஆனால், அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இந் நிலையில், கேரள மாநிலம் மலப் புரம் மாவட்டம் பணக்கரகாரா பகுதியில் குஞ்சுமுகமது தங்கியிருப் பதாக சிபிசிஐடி சிறப்பு புலனாய் வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரை வியாழக் கிழமை அதிகாலை கைது செய்து கோவைக்கு அழைத்துவந்தனர்.
கோவை 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட் டார். கைது செய்யப்பட்ட குஞ்சு முகமது, கோவை குண்டு வெடிப்புக்கு வெடிபொருட்களை கைமாற்றிக் கொடுத்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது அவர் கைதாகியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நீண்ட நாள் தலைமறைவான எதிரிகளில் குஞ்சு முகமது கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முஜிபுர் ரகுமான், டெய்லர் உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.