தமிழகம்

பூர்விகா மொபைல்ஸ் 200 கிளை பாலவாக்கத்தில் திறப்பு

செய்திப்பிரிவு

பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் தனது 200வது கிளையை திருவான்மியூரை அடுத்த பாலவாக்கத்தில் தொடங்கியுள்ளது.

பல்வேறு நிறுவனங்களின் மொபைல் போன்கள், டேப் வகைகள், ப்ளூடூத் போன்ற துணைக் கருவிகள், ரீசார்ஜ், சிம்கார்டுகள், டேட்டா கார்டுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்துவரும் பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் பாலவாக்கத்தில் 200வது கிளையை தொடங்கியுள்ளது. 2,250 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த கிளை உள்ளது.

பூர்விகா மொபைல்ஸ் தலைமை செயல் அலுவலர் என்.யுவராஜ் கூறுகையில், “10 ஆண்டுகளுக்கு முன் கோடம்பாக்கத்தில் 6 பணியாளர்களுடன் முதல் கிளை தொடங்கப்பட்டது. தற்போது 3,500 ஊழியர்களுடன், 200 கிளைகளுடன் மதிப்பிற்குரிய மொபைல் நிறுவனமாக வளர்ச்சிய டைந்துள்ளது. மொபைலை தேர்ந் தெடுக்க அளிக்கப்படும் வசதி, பழைய மொபைலுக்கு சிறப்பான விலையில் புதிய மொபைலை மாற்றித்தரும் வசதி, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் ஆகியவை நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய அம்சங்களாகும்” என்றார்.

மேலாண்மை இயக்குநர் கன்னி யுவராஜ் கூறுகையில்,“ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்து பணியாற்றுதலில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அக்கறையுடன் சேவையாற்றுவோம்” என்றார்.

SCROLL FOR NEXT