தமிழகம்

போராட்டம் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துப் பேச வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 

செய்திப்பிரிவு

கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு போராட்டம் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் (விஏஓ) கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட்டிருந்தால் உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடைந்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகியிருக்கும். குறிப்பாக தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உட் பட்ட உள்ளாட்சிகளில் கிராமப்புற நிர்வாகத்துக்கு அலுவலர்களின் பணி மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

பணியிடங்களை நிரப்ப வேண்டும்

இச்சூழலில், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். 2,467 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆன்-லைன் சான்றி தழ் வழங்குவதற்கு போதிய வசதி கள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை முதல் (நவ.28) ஆன்-லைன் சான்றி தழுக்கு பரிந்துரைக்காமல் இருப்பது, அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் வட்டாட்சியர் அலுவல கங்களில் இரவு தர்ணா போராட்டம், டிச.7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம், டிச.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அழைத்து பேச வேண்டும்

இப்போராட்டம் நடைபெற்றால் வருவாய் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்ட எந்த சான்று களையும் பெற முடியாமல் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுவார்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசி, சுமூகத் தீர்வு காண வேண்டும். அதன்மூலம் கிராமப்புற மக் களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கவும், கிராமப்புற வளர்ச்சி ஏற்படவும் அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT