தமிழகம்

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணிவரன்முறை செய்வதற்கான சிறப்புத் தேர்வை விரைவாக நடத்த வேண்டும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி விதிமுறைகளின்படி சிறப்புத் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும், தற்போதைய தொகுப்பூதியத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.43,200 ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எஸ்.செந்தில்குமார், பொதுச்செயலாளர் கே.அருண கிரி, துணைத் தலைவர் எஸ்.வசந்தகுமார், துணை பொதுச்செயலாளர் எச்.புவ னேஸ்வரி, பொருளாளர் எஸ்.பவானி உட்பட ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் கலந்துகொண் டனர். அடுத்தகட்டமாக, உயர் கல்வித் துறை அமைச்சர், முதன்மைச் செயலர் ஆகியோரி டம் நேரில் முறையிட உள்ளதாக பொதுச்செயலாளர் அருணகிரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT