தமிழகம்

வனப் பணியாளர் தேர்வுகள் டிச.6-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை

வனத்துறை வெளியிட்ட செய் திக்குறிப்பு:

தமிழ்நாடு வனத்துறையில் 300 வனவர், 726 வனக்காப்பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இணைய வழித் தேர்வுகள் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற இருந்தது.

இதற்கிடையில் நாகப்பட்டி னம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கஜா புயல் தாக்குதலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் மேற்கூறிய மாவட்ட விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

வனவர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப் பாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT