ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மற் றும் மதுக் கூடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. மதுக் கூடங்களில் தூய்மை பரா மரிக்கப்படாததால், பலர் வெளி யில் வந்து மது அருந்தி, பிளாஸ் டிக் டம்ளர், பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகளை தெருக்களில் வீசிவிடுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் உருவாகின்றன.
இந்நிலையில் டாஸ்மாக் நிர் வாகத்துக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள கடிதம்:
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிகப்பட்டிருப்பது தொடர்பாகவும், அதற்கான மாற் றாக கண்ணாடி தம்ளர், குடிநீர் பாட் டில் போன்றவற்றை பயன்படுத் தலாம் என்பது குறித்தும் சுவரொட் டிகளை தயாரித்து, பிரதானமாக பார்வையில் படும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்ட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.