நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் மல்லிகாபுரத்தில் தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஈரோடு மண்டல மேலாளர் வினோத் சந்திரன் கடந்த 23-ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
இதில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைக ளில் சில கவரிங் எனத் தெரியவந்தது. விசார ணையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளரான, பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் நாவல் நகரைச் சேர்ந்த டி.ராஜேந்திரன், வாடிக்கை யாளர்களின் பெயர்களில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1.56 கோடி பணம் எடுத்தது தெரியவந்தது. இதற்கு வங்கியின் கிளை மேலாளரான மதுரை டி.கல்லுப்பட்டி டி.சுரேஷ், துணை மேலாளரான கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.வாசுதே வன் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ் மற்றும் வாசுதேவனை போலீஸார் கைது செய்தனர். ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.