தமிழகம்

4 வட்டார போக்குவரத்து அலுவலகத்தையும் ஒரே ஆர்டிஓ கவனிப்பதால் பணிகள் பாதிப்பு

செய்திப்பிரிவு

நான்கு வட்டார போக்குவரத்து அலு வலகத்துக்கும் ஒரே ஆர்டிஒ பணியில் இருப்பதால், ஆவணங் கள் தேங்கியுள்ளதாகவும் நிரந் தரமாக ஆர்டிஓவை நியமிக்க வேண் டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் ஆர்.டி. ஓவாக இருப்பவர் செந்தில் குமார். தற்போது இவர் தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவகத் தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதனால் பணி களை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. உரிமத்தை புதுப்பித்தல், மாற்றம் செய்தல், வாகனப்பதிவு, பெயர் மாற்றம், பைனான்ஸ் வாகனங்கள் பதிவு மற்றும் ரத்து செய்தல் உள்ளிட்ட பணிகள், உரிய காலத்துக்குள் முடிக்காத காரணத்தால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அதனால், பலமுறை அலைக் கழிக்கப்பட்டு, பணம் கொடுத்து காரி யம் சாதிக்க வேண்டிய நிர்பந் தம் ஏற்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் காரணமாக இந்த 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்துத் துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து பெயர் வெளி யிடாத விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆர்டிஓ அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள் ளன.

ஆனால், தற்போது தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காஞ்சிபுரம் என நான்கு அலுவலகத் திலும் ஒருவரே கூடுதல் பணிகளை பார்க்க வேண்டியுள்ளது. அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று ஆவணங்களை சரிபார்க்க முடியவில்லை. இதனால் பனிகள் காலதாமதம் ஆகிறது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT