முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், தாக்கங்கள் குறித்து பள்ளியில் இருந்தே மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வது அவசியம் என்று ‘தி இந்து’ குழுமம் நடத்திய கருத்தரங்கில் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தினார்.
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின், பள்ளி மாணவருக்கான சிறப்பு பதிப்பான ‘தி இந்து இன்-ஸ்கூல்’ சார்பில், பள்ளி முதல்வர்களுக் கான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘மாணவர் களும், சமூக ஊடகங்களும்’ என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், ‘மாணவர்களும், சமூக ஊடகங்களும் - பொறுப் புணர்வுக்கும் பொறுப்பின்மைக் கும் இடையிலான இடைவெளி’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ குழு மத்தின் தலைவர் என்.ராம் சிறப் புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:
முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக ஊடகங் களின் தாக்கம் எங்கும் நிறைந்துள் ளன. அவற்றின் பாதிப்பு அரசி யலையும் விட்டுவைக்கவில்லை. பிரதமர் மோடி தன் கருத்துகளை பெரும்பாலும் ட்விட்டரிலேயே வெளிப்படுத்துகிறார்.
சமூக ஊடகங்களால் தகவல் கள் ஜனநாயகம் ஆகியிருக் கின்றன. தகவல்கள் அனைத்து தரப் பினரையும் சென்றடைவது உண் மைதான். ஆனால், அவை ஏற்படுத் தும் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மக் களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, அரசியல் என அனைத்து துறை களிலும் அவை உண்டாக்கும் தாக்கங்கள் அதிகம். பயனுள்ள தகவல்கள் பரப்பப்படும் அதே நேரம், தேவையற்ற விஷயங்கள், வதந்திகள், வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் தகவல் களும் பரப்பப்படுவதையும் மனதில் கொள்ள வேண்டும். தவறான தகவல்களுக்கு சம்பந்தப்பட சமூக ஊடகங்கள் பொறுப்பு ஏற் பதில்லை. இத்தகைய சூழலில் அவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியமாகிறது.
ஐரோப்பிய நாடுகளில் 16 வய துக்கு உட்பட்டவர்கள் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்க முடியாது. மற்ற நாடுகளில் இந்த கட்டுப்பாடு 13 வயதாக உள்ளது.
முகநூல் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் இருக் கிறது. இந்தியாவில் 29 கோடிக்கு மேற்பட்டோர் முகநூல் கணக்கும், 20 கோடிக்கு மேற்பட்டோர் வாட்ஸ் அப் கணக்கும் வைத்துள்ளனர். சுமார் 25 கோடி பேர் யூ-டியூப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 2 ஆண்டு களில் 50 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அண்டை நாடான சீனாவில் முக நூல், வாட்ஸ்அப், ட்விட்டர் உள் ளிட்ட சமூக ஊடகங்கள் எதுவும் கிடையாது. இந்தியாவில் இளைஞர் கள் குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யூ-டியூப் மூலமாக ஆபாச படங்கள் பார்ப்பதாகவும், இதற்காகவே ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள், தாக்கங்கள் குறித்து பள்ளியில் இருந்தே மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பொறுப்பின்றி வெளி யிடப்படும் தகவல்களை, கட்டுப் பாடின்றி பரப்பும் சமூக ஊடகங் களை தவறுக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அதற்கான தண்ட னைகளை கடுமையாக்க வேண் டும். அதற்கேற்ற சட்டதிட்டங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ‘இந்து’ என்.ராம் பேசினார்.
தொடர்ந்து, பள்ளி முதல்வர் கள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, ‘தி இந்து இன்-ஸ்கூல்’ பதிப்பின் ஆசிரியர் கிருத்திகா ரெட்டி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஆட்டம்ஸ் கான்செப்ட் எஜுகேஷன் ஸ்டுடியோ நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, அமிர்தாஞ்சன், மேவ்ரிக் ஆகியவை ஸ்பான்சர் செய்திருந்தன.