சென்னைக்கு அனுப்பப்பட்ட ஆவின்பாலில் கலப்படம் செய்த தாக 7 ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்குக் கொண்டு செல் லப்படும் பாலில் கலப்படம் செய் வதாக வெள்ளிமேடு போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்துள் ளது. இதையடுத்து புதன்கிழமை காலை வெள்ளிமேடு பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான போலீஸார் மாறுவேடத்தில் மறைந்திருந்து கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது திருவண்ணாமலை யில் இருந்து 90 கேன்களில் 3,600 லிட்டர் பால் ஏற்றிவந்த லாரி திண்டிவனம் அருகே கோவிந்தா புரம் அருகே நின்றுள்ளது. அந்த இடத்தில் 2 மினி வேன், 2 பைக்குகளும் நின்றுள்ளன.
அந்த பால் லாரியில் இருந்து 45 கேன்களை லாரியில் வந்த ஊழியர்கள் இறக்கி வைக்க, அந்த கேன்களை அங்கிருந்தவர்கள் மினி வேனில் ஏற்றியுள்ளனர். அதற்கு ஈடாக மற்றொரு லாரியில் இருந்த 45 கேன் தண்ணீர் பாலில் கலக்கப்பட்டுள்ளது. இதை மறைந் திருந்து கண்காணித்த போலீஸார் வருவதற்குள் பால் லாரி புறப்பட்டு சென்றுவிட, மற்றவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 மினி வேன், 2 பைக் மற்றும் 1,800 லிட்டர் கொண்ட 45 கேன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த ஆவின் பால் கலப்படத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ், சத்தியராஜ், ரமேஷ், ராணிபேட்டையைச் சேர்ந்த குணா, முருகன், அன்பரசன், சுரேஷ் ஆகிய 7 பேரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இவர்கள் 7 பேரும் ஆவின் ஊழியர்கள் எனத் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.