கி.மு. 400-ம் ஆண்டு காலத்திலேயே அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. ஆனால், அப்போது மயக்க மருத் துவம் இல்லை. அறுவைச் சிகிச் சையின்போது நோயாளியின் கை, கால்களைக் கட்டிப் போடுவது, நோயாளி அசைந்துவிடாமல் பிடித் துக் கொள்வது அல்லது மரக்கட் டையால் அடித்து மயக்க நிலையை அடையச் செய்வது போன்ற முறை கள் இருந்துள்ளன. அந்த காலக் கட்டத்தில் செய்யப்பட்ட சிறிய அறுவைச் சிகிச்சைகள் கூட சித்திர வதைகளாகவே இருந்துள்ளன. 1846-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வலியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும் என் பதை வில்லியம் தாமஸ் கிரீன் நிரூபித்தார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கில்பர்ட் என்ற நோயாளிக்கு தாடையில் உள்ள கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஈதர் என்ற மயக்க மருந்து வாயுவை பயன்படுத்தி நோயாளிக்கு மயக்கம் கொடுத்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன், வலியில்லாமல் அறுவைச் சிகிச் சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். மருத்துவ உலகம் அவரை கொண்டாடியது. இதனை முன்னிட்டே ஆண்டுதோறும் அக் டோபர் 16-ம் தேதி (இன்று) உலக மயக்கவியல் தினம் கடை பிடிக்கப்படுகிறது. மயக்கவியல் துறையின் தந்தையாக வில்லியம் தாமஸ் கிரீன் போற்றப்படுகிறார்.
மயக்க மருத்துவம் குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை டீனும் மயக்க வியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.பொன்னம்பல நம சிவாயம் கூறியதாவது:
‘‘அறுவைச் சிகிச்சைக்கு முக்கியமான முதுகெலும்பாக மயக்க மருத்துவர் திகழ்கிறார். நோயாளியின் உடல் அறுவைச் சிகிச்சைக்கு தகுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறு நீரகம், மூளை போன்ற உறுப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார். அறுவைச் சிகிச்சை முடியும் வரை உடனிருந்து நோயாளிக்கு வலி இல்லாமலும், உணர்வு இல்லாமலும், உறக்க நிலையில் இருக்கும்படி செய்கிறார். அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தன்னுடைய பணியை சுலபமாக செய்ய ஏற்ற சூழ்நிலையை உரு வாக்குகிறார்.
அறுவைச் சிகிச்சை முடிந்ததும் மயக்க நிலையில் இருக்கும் நோயாளியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான் சவாலான பணி. நோயாளி கண் விழித்து, தானாக சுவாசித்து, உற வினர்களை அடையாளம் கண்டு, உடலின் எல்லா உறுப்புகளும் இயல்பாக இயங்க வேண்டும். இதை உறுதி செய்த பின்னர்தான் மயக்க மருத்துவர் அந்த இடத்தை விட்டுச் செல்ல முடியும். மயக்க மருத்துவர் பணி என்பது அறுவைச் சிகிச்சைக்கு முன்பே தொடங்கி, அறுவைச் சிகிச்சைக்கு பின்னர்தான் முடிவடைக்கிறது.
நோயாளிகளை மயக்க நிலைக்கு அழைத்துச் செல்வதில் இரண்டு வகை உள்ளது. கை, கால் போன்ற இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் போது அந்த இடத்தை மட்டும் உணர்வு இழக்கச் செய்வது ஒரு வகை. இதில், அறுவைச் சிகிச்சையின் போது நோயாளி சுய நினைவுடன் இருப்பார். நோயாளி சொந்தமாக சுவாசிக்க முடியும். இதுவே தலை, நெஞ்சு, வயிறு போன்ற இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் போது முழு மயக்கம் கொடுப்பது மற்றொரு வகை. அப்போது நோயாளியின் செயற்கை சுவாசத்தை மயக்க மருத்துவர் கவனித்துக் கொள் கிறார். அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர், மயக்கம் தெளிய மாற்று மருந்து கொடுத்து சுயநினைவுக்கு அழைத்து வந்து, அவர் சொந்தமாக சுவாசிப்பதை உறுதி செய்கிறார்.
இதேபோல் இதயம், நுரையீரல் களின் இயக்கத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் முன்புபோல் நல்ல முறை யில் இயங்க வைக்கிறார். வலி மருத்துவம் இப்போது பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் வலியில் லாமல் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி போன்ற நாட்பட்ட வலிகளுக்கு மயக்க மருத்துவரால் தீர்வு காண முடியும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வலி நிவாரணம் அளிக் கவும் வலியின்றி பராமரிக்கவும் வலியில்லா மருத்துவம் பயன் படுகிறது. தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை, ஷாக் டிரீட்மெண்ட், ஹிப்னாடிஸம், குற்றவாளிகளிடம் உண்மையை கண்டறிவது போன்ற வற்றில் அவர்களின் பணி முக்கிய மானது. மயக்க மருத்துவரின் பணி பெரும் சவால்களைக் கொண்டது. அவர்களின் பணி சிறப்புகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.அறுவைச் சிகிச்சை முடிந்ததும் மயக்க நிலை யில் இருக்கும் நோயாளியை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதுதான் சவாலான பணி.