தமிழகம்

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர் களிடம் கூறும்போது, ''தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உள்ள காற்றில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிகபட்சமாக 8 செ.மீ., சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 6 செ.மீ., தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் 5 செ.மீ., கரூர் மாவட்டத்தில் 4 செ.மீ., திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT