தமிழகம்

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல்

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா பெயரில் அமைச்சர்கள் உட்பட ஏராள மானோர் மனு செய்தனர்.

அதிமுக சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரு கிறது. 1988 முதல் இதுவரை நடந்த 6 தேர்தல்களில் அதிமுக பொதுச் செயலாளராக ஜெய லலிதா போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர் தல் ஆணையராக கட்சியின் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதற்கான வேட்புமனு தாக்கல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.

முதல்வர் ஜெயலலிதா பூர்த்தி செய்து கையொப்பமிட்டிருந்த மனுவை, ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகையுடன் சேர்த்து தேர்தல் ஆணையர் விசாலாட்சி நெடுஞ் செழியனிடம் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி னார். அந்த மனுவை ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தி ருந்தார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் வழிமொழிந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பெயரில் அமைச் சர்கள் நத்தம் விசுவ நாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, செந்தில் பாலாஜி, மாதவரம் மூர்த்தி உட்பட ஏராளமானோர் மனு அளித்தனர்.

பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் மனு செய்ய மாட் டார்கள் என்பதால் அவர் 7-வது முறையாக போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பு, தேர்தல் நாளான 29-ம் தேதி அறிவிக்கப்படும்.

SCROLL FOR NEXT