தமிழகம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளில் 2,895 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலையில் போட்டித் தேர்வு நடத்தியது. இதன் முடிவு அக்டோபரில் வெளியிடப்பட்டது. இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய 3 பாடங்களுக்கு திருத்தப்பட்ட புதிய முடிவு வெளியிடப் பட்டு, கடந்த 14-ம் தேதி மறு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட 3 பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) திங்கள்கிழமை இரவு வெளியிட்டது. தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு பணிநியமன உத்தரவு, பள்ளிக்கல்வி இயக்குனர் மூலம் தனியே வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT