தமிழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்ததில் ரூ.62 கோடி முறைகேடு: ஊழல் தடுப்பு துறையில் உயர் கல்வித் துறை செயலாளர் புகார்

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ் அச்சடித்ததில் ரூ.62 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் புகார் கொடுத்து இருக்கிறார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவ காரம் பூதாகரமாகியிருக்கும் நிலை யில், மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடுவதில் வழங்கிய டெண் டரிலும் முறைகேடு நடந்திருப் பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருக்கும் சுரப்பா கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு 2 ஆண்டுகள் துணை வேந்தர் இல்லாமல் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வந்தது. பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அந்த பணிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் கள் குழுவின் தலைவராக இருப்பவர் கவனிப்பார்.

அதன்படி, அண்ணா பல் கலைக்கழகத்தின் பணிகளை அப்போதைய துணை வேந்தர் குழுவின் தலைவரும், தற் போதைய உயர் கல்வித்துறை செயலாளருமான சுனில் பாலிவால் கவனித்து வந்தார்.

இந்நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலி வால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் 6 பக்கங்கள் கொண்ட ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய தேர்வுக் கட்டுப் பாட்டு அதிகாரியான உமா, பாது காப்பு நிறைந்த மற்றும் உயர் மதிப்பீடு கொண்ட மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடும் டெண் டரை கோரியுள்ளார். சான்றிதழ்கள் அச்சிடுவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கொடுக்காமல், நிறுவனம் தொடங்கி 15 நாட்களே ஆகியிருந்த புதிய நிறுவனத்துக்கு சான்றிதழ்கள் அச் சிடும் ஒப்பந்தத்தை கொடுத்து இருக்கிறார். மேலும், அந்த நிறு வனம் டெண்டர் கோருவதற்கான குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப் பிக்காமல் தாமதமாகவே விண்ணப்பித்து இருந்தது.

அந்த தனியார் நிறுவனத்துக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.62 கோடி மதிப்புள்ள ஒப் பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல் கலைக்கழகத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் சான்றிதழ்களே தேவை. ஆனால் 20 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் வழங்கியதில் முறை கேடுகள் நடந்திருப்பதை கண்ட றிந்த அப்போதைய பல்கலைக் கழக துணைவேந்தர்கள் குழுவின் தலைவர் சுனில்பாலிவால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். விரைவில் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை

அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற கல்லூரிகளின் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலை பார்த்தே பொறியியல் கவுன்சலிங்கில் அதிகமான மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். ‘டாப் 20’ கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடிப்பதற்காக தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் போட்டி போடுகின்றனர். இதனால், தேர்ச்சி பெற வைப்பதாக கூறி, மாணவர்களிடம் இருந்து அந்த கல்லூரி நிர்வாகத்தினரே பணத்தை வாங்கி மொத்தமாக வசூல் செய்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவ்வாறு பணம் கொடுத்த தனியார் கல்லூரி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பணம் கொடுத்த கல்லூரிகள் குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், 13 கல்லூரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னை புறநகரில் செயல்படும் 5 கல்லூரிகள் உட்பட கோவை, சேலம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன. தனியார் கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். பணம் கொடுத்த கல்லூரி நிர்வாகத்தினரை இந்த வழக்கின் சாட்சிகளாக மாற்றுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறோம் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT