தமிழகம்

பன்முகத் திறமை படைத்தவரை தமிழகம் இழந்தது: கருணாநிதி மறைவுக்கு டி.எம். கிருஷ்ணா இரங்கல்

செய்திப்பிரிவு

 மூத்த அரசியல்வாதி, எழுத்தாளர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை படைத்த திமுக தலைவர் கருணாநிதியை தமிழகம் இழந்துவிட்டது என்று கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

நடிகராக, எழுத்தாளராக, திரைக்கதை ஆசிரியராக, கதாசிரியராக பன்முகத் திறமை கொண்ட ஒரே அரசியல்வாதி திமுக தலைவர் கருணாநிதியாகத்தான் இருப்பார். ஒவ்வொரு அரசியல்வாதியின் வாழ்க்கையிலும் முரண்பாடுகள், பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். ஆனால், கருணாநிதியோ மிகச்சிறந்த சிந்தனையாளர், கலாச்சார அடையாளம், மிகஅற்புதமான நிர்வாகி. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய இணைப்புப்பாதையை நாம் இழந்துவிட்டோம். கருணாநிதியின் இழப்பு மிகப்பெரிய பேரிழப்பாகும்.

இவ்வாறு டிஎம் கிருஷ்ணா இரங்கலில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT