வண்ணிக் கண்மாய் கரையில் கண்டறியப்பட்ட 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு.

 
தமிழகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம், திருப்​பத்​தூர் அருகே 13-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டது.

திருப்​பத்​தூர் அருகே காரையூர் புது​வள​வில் உள்ள வண்ணி கண்​மாய் கரை​யில் இருந்த கல்​வெட்டை சிவகங்கை தொல்​நடைக்​குழு நிறு​வனர் புல​வர் காளி​ரா​சா, செயலர் நரசிம்​மன், காரைக்​குடி அழகப்பா அரசு கலைக் கல்​லூரி வரலாற்று இணைப் பேராசிரியர் வேலா​யுத​ராஜா ஆகியோர் ஆய்வு செய்​தனர்.

பின்​னர் அவர்​கள் செய்​தி​யாளர்​களிடம் தெரிவித்​த​தாவது: திருப்​பத்​தூர் அருகே கண்​டெடுக்​கப்​பட்ட கல்​வெட்டு 2 அடி நீளம் கொண்​டது. மொத்​தம் ஏழு வரி​கள் உள்​ளன. நிறைவடை​யும் இடத்​தில் ஒரு பூரண கும்​ப​மும், அதன் இரு பக்​க​மும் குத்​து​விளக்​கு​களும் காணப்​படு​கின்​றன. எழுத்​தமைதி மூலம் இக்​கல்​வெட்டு 13-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்​தது என அறிய முடிகிறது.

கல்​வெட்டுச் செய்தி மூலம், வண்​ணக்க நல்​லூர் என்ற இப்​பகு​தி​யில் உள்ள குளக்​கரை​யில் வாழ்ந்த சீயர் (வைணவ ஆச்​சா​ரி​யார்) மக்​களுக்கு நல்​வாழ்​வுக்​கான வேத நெறியை கற்​பித்து பாது​காத்து வந்​துள்​ளார் என்​பதை அறிய முடிகிறது. மேலும், இப்​பகு​தி​யில் உள்ள அழகிய மணவாளப் பெரு​மாள் கோயி​லில் முதலாம் மாறவர்​மன் சுந்​தர​பாண்​டியன், சடைய​வர்​மன் சுந்​தர​பாண்​டியன் ஆகியோரது கல்​வெட்​டு​கள் காணப்​படு​கின்​றன. அதி​லும் வண்​ணக்க நல்​லூர் எனும் பெயர் இடம் பெற்​றுள்​ளது.

கல்​வெட்டு கிடைத்த கண்​மாயை வண்​ணிக் கண்​மாய் என்​றும், அரு​கே​யுள்ள அய்​ய​னார் கோயில் வன்​னிகுன்னி அய்​ய​னார் என்​றும் அழைக்​கின்​றனர். இதன்​மூலம், இப்​பகுதி வண்​ணக்க நல்​லூர் என்று அழைக்​கப்​பட்​டிருப்​பதை அறிய​லாம். தமிழகம் முழு​வதும் கிராமங்​களில் காவல் தெய்​வ​மாக உள்ள அய்​ய​னார், பூரணா, புஷ்பகலா ஆகிய தேவியருட​னும் காட்​சி​யளிப்​பது வழக்​கம். ஆனால், இங்​குள்ள அய்​ய​னார் தேவியர் இன்றி தனித்து உத்​குடி ஆசனத்​தில் (அமர்ந்த நிலை) கம்​பீர​மாக வீற்​றிருக்​கிறார்.

இரண்டு யானை வாக​னங்​கள் உள்​ளன. அய்​ய​னார் சிற்​பத்​தின் தலை​யில் ஜடா​பாரம், நெற்​றி​யில் கண்ணி மாலை, மார்​பில் சன்​னவீரம், காதுகளில் மகர குண்​டலங்​கள், மார்​பில் உதரபந்​தம் ஆகிய​வற்​றுடன் வலது கையில் செண்டை ஏந்​தி​யுள்​ளார். இடது கரம் தண்ட ஹஸ்​தத்​தில் அமைந்​துள்​ளது. அய்​ய​னார் சிற்​பம் 12 அல்​லது 13-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்​தவை​யாக இருக்​கலாம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT