தமிழகம்

சட்டத்தைப் பார்க்காதீர்கள்; கருணாநிதியின் சரித்திரத்தைப் பாருங்கள்: தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்

ஸ்கிரீனன்

சட்டத்தைப் பார்க்காதீர்கள் என்று தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞருக்கு கடற்கரையில் இடம் கொடுங்கள். சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர் சரித்திரத்தைப் பாருங்கள்” என்று வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT