‘சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை ஜெயிக்கவைக்கும் தாசில்தார்’ என்ற தலைப்பிலான செய்தி கடந்த 8-ம் தேதி ‘தி இந்து’ இதழில் இரண்டாம் பக்கத்தில் (பூச்செண்டு) வெளியானது.
இச்செய்தி தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சென்னை மாவட்டப் பொருளாளர் எஸ்.கே.குலாம் தஸ்தகிர் தனது கருத்துகளை ‘தி இந்து’விடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மதுரை தாசில்தார் பாலாஜி, சென்னை பள்ளிகளுக்கு வந்து பாடம் எடுத்த பிறகுதான் 2012-ல் 92% தேர்ச்சி கிடைத்தது, 12 பள்ளிகள் 100% தேர்ச்சியை எட்டின, அவரது முயற்சியில் ஒரு மாணவன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பல நூறு ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். பள்ளி முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு களை தானாக முன்வந்து நடத்து கிறார்கள். தலைமை ஆசிரியர் களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆசிரிய சமூகத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் காரணமாகவே சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் சாதிக்கின்றனர்.
2013-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே முதலாவதாக 491 மதிப்பெண் எடுத்த மாணவி சலீமா ஹசீனா, பெரம்பூரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். 2012-13ம் கல்வியாண் டில் சென்னை மாநகராட்சி பள்ளி களின் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு 2 பிரிவாக சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. சைதை, நுங்கம் பாக்கத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி களில் இந்த வகுப்புகள் நடத்தப் பட்டன. இதற்காக பெரம்பூர், தண்டையார்பேட்டை, புரசை பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கள் பள்ளி வகுப்புகளை முடித்து விட்டு சிறப்பு வகுப்புகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பினர். கடைசியில், சிறப்பு வகுப்புக்குச் சென்ற பெரும்பான்மை மாணவர் கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற் றனர். கடந்த ஆண்டில் அனைத்து சிறப்பான தேர்ச்சிக்கும் ஆசிரியர் களும் தலைமை ஆசிரியர்களும் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகளும் நமது மேயரும் மாநகராட்சியின் சிறப்பு திட்டங் களுமே காரணம். கூட்டு முயற்சி யால் மட்டுமே கல்வியில் மேன்மையை அடைய முடியும்.
இவ்வாறு குலாம் தஸ்தகிர் கூறியுள்ளார்.