மெரினாவில் எந்த நினைவகமும் இருக்கக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, ‘‘மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வின் நினைவிடங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து இருந்தேன். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த எனது வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் முறையீடு செய்துள்ளேன். உச்ச நீதிமன்றமும் இதுதொடர் பாக மனு தாக்கல் செய்ய அனுமதி யளித்துள்ளது. என்னைப் பொறுத் தமட்டில் மெரினா கடற்கரையில் விதிமுறைகளுக்குப் புறம்பாக யாருக்கும், எந்த நினைவகமும் இருக்கக்கூடாது. இதை வலி யுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்’’ என்றார்.