தமிழகம்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளி யிட்டுள்ளார். இதனால், கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைராய்டு பிரச்சினை அதிகமானது. இதனால், பொதுக் கூட்டங்களில் பேசுவதை தவிர்த்து வந்தார். கட்சி அலுவலகத்துக்கு சென்று, கட்சி நிர்வாகிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். அவ்வப்போது செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போதும்கூட அதிகமாகப் பேசாமல், கேள்விகளுக்கு சில வார்த்தை களில் மட்டுமே பதில் அளித்தார்.

இந்த நிலையில், தைராய்டு மற்றும் குரல்வளப் பிரச்சினை ஆகியவற்றுக்கு மேல்சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது. அமெரிக்காவில் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாகவும், ஆகஸ்ட் மாத இறுதியிலேயே அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், அமெரிக்கா சென்ற பிறகு, அவரது புகைப்படங்கள் எதுவும் வெளியாக வில்லை. இந்நிலையில், மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகபாண்டி யனுடன் சேர்ந்து இருக்கும் புகைப் படங்களை விஜயகாந்த் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும் அந்த புகைப்படங்களைப் பார்த்ததும், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT