தமிழகம்

தமிழக அரசியலில் மிகப்பெரிய நீண்ட பயணத்தை கொண்ட தலைவர்: ராகுல் காந்தி இரங்கல்

செய்திப்பிரிவு

தமிழக அரசியலில் மிக நீண்ட பயணத்தையும், அழியா அடையாளத்தையும் பதித்த உயர்ந்த மனிதர் திமுக தலைவர் கருணாநிதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களால் அதிகம் விரும்பப்பட்டவரும், தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக நீண்ட பயணத்தையும், அழியா அடையாளத்தையும் கொண்ட பேருருவம் கருணாநிதி. அவரின் மறைவால், இந்திய அரசு தனது சிறந்த மகனை இழந்துவிட்டது. அனைவராலும் விரும்பப்படும் மிகச்சிறந்த தலைவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT