தமிழகம்

சென்னையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு பசுமை விருது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் சுற்றுச்சூழல் பாது காப்பில் சிறந்து விளங்கும் குடி யிருப்போர் நலச் சங்கங்களுக்கு பசுமை விருது வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர் வில் சிறந்து விளங்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆண்டுதோறும் பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு கட்டமைப்பு களை ஏற்படுத்தியுள்ள தொழிற் சாலைகள் மற்றும் கல்வி நிறு வனங்களுக்கும் பசுமை விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களுக் கும் பசுமை விருதுகள் வழங்கப் படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சட்டப்பேரவையில் அறிவித் திருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத் துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்றது. அதில், திடக்கழிவு மேலாண்மை, பசுமை போர்வை மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருளைப் பயன்படுத்துவது, சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவது, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி சேமிப்பு, பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது, மறு உபயோகம், மறுசுழற்சி செய்வது ஆகிய அம்சங்கள் அடிப்படையில் குடியிருப்போர் நலச் சங்கங்களை தேர்வு செய்து, பசுமை விருதுகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் ஒவ் வொரு மண்டலத்துக்கும் தலா 3 சங்கங்கள் வீதம் 45 குடியிருப் போர் நலச் சங்கங்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகள் கடந்த 2017 - 18 நிதியாண்டில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளைப் பெற ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு ஜூன் மாதம் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் பசுமை விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படும்.

இதுதொடர்பாக மயிலை மக்கள் நலச்சங்க செயலாளர் கே.விஸ்வநாதன் கூறும்போது, “ஒரு திட்டத்தின் அமலாக்கமும், செயலாக்கமும் மக்களால் செய் யப்பட வேண்டும். அதை உணர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களை ஈடுபடுத்தவும், அவர் கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அரசு சார்பில் பசுமை விருது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

SCROLL FOR NEXT