தமிழகம்

கருணாநிதி மறைவு நாட்டுக்கு பேரிழப்பு: கேஜ்ரிவால் இரங்கல்

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘மிகச்சிறந்த தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு ஆற்றொணத் துயரத்திற்கு ஆளானேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT